Saturday, May 28, 2011

கவிதை

பேனா எடுத்து எழுத முடியவில்லை
காரணமும் தெரியவில்லை
மனதில் நீ இல்லையோ
அய்யோ சந்தேகமா
உன்னை பற்றி தவறாக எழுத முடியவில்லை
நீ என் உயிரில் கலந்துவிட்டாயடா..

Wednesday, May 25, 2011

கவிதை

உன்னை தேடி வரும் அன்பை
    நீ விட்டு விடாதே;
பிறகு நீ தேடி தேடி
    சென்றால் கூட;
அது கிடைக்காமல் போகலாம்!!!!

Sunday, May 22, 2011

பையா..


கவிதை

கண்ணீர் வரும் நேரங்கள்;
பெற்றோர் திட்டும் போதும்,
அம்மா அடிக்கும் போதும்,
தோழியுடன் சிரிக்கும் போதும்,
நண்பன் பேசாமல் இருக்கும் போதும்,
இதையெல்லாம் அனுபவிக்கும் போது கண்ணீர் மட்டுமே கரைந்தன;
ஆனால், நீ கொடுத்த பிரிவினால் நான் மெழுகாய் கரைந்தேன்;
என் கண்ணீரை துடைக்கவும் என்னை அணைக்கவும் நீ வருவாயா?!?!?!?!

Saturday, May 21, 2011

எனக்கு பிடிச்ச ஹீரோயின்...


கவிதை

**** காதல் சுகமானதா? வலியானதா? ****
சுகம் தந்த போது ஏற்றுக்கொண்டேன்;
என் மனம் மகிழ்ந்தது,
நானே காற்றினில் பறப்பதாய் தோன்றியது,
என்னை நானே அழகாய் கண்டேன்,
தூங்கும் போதும் உன்னையே கனவினில் கண்டேன்,
நிமிடம் தவறாமல் உன்னை நினைத்தேன்,

இப்படி காதலித்த பெண்ணை சந்தேகம் என்ற ஒரே வார்த்தையில் கொன்றாய்;
பிரிவு மட்டுமே தந்தாய்,
உணர்ச்சியை கொலை செய்தாய்,
பாசத்தை பொய் என்றாய்,
அன்பை வேஷம் என்றாய்,
மொத்தத்திலதென்னை வெறுத்து
பைத்தியம் போல் புலம்பவிட்டாய்!!!!!!!

கவிதை

நீ என் உயிரில் கலந்தாய்;
இப்போது நீ திருப்பி கேட்கிறாய்;
கொடுக்க தயாராகி விட்டேன்,
உன் உயிரை அல்ல என் உயிரை.

Thursday, May 19, 2011

கவிதை

நட்பு என்ற உறவில் வந்தாய்;
பாசம்,அன்பு என்ற உணர்வை தந்தாய்;
காதல் என்ற உயிராய் நின்றாய்;
அனைத்துமே பொய் என்று உணர்ச்சியை கொன்றாய்.

ஒன்னும் இல்லை

இதலாம் சும்மாங்க....

ஒன்னும் இல்லை

காதல் புரியாத ஒன்று "அன்று"

Tuesday, May 17, 2011

கவிதை

எனக்கு கஷ்டங்கள் இருந்த போது அதனை
நீக்கி என்னை மகிழவைத்த - நீ;
நீ இல்லாமல் இருக்கும் போது - மகிழ்ச்சியும்
எனக்கு கஷ்டத்தை தான் தரும்
என்பது ஏன் புரியவில்லை;

கவிதை

கண்ணில் ஆரம்பித்து கல்யாணத்தில்
                      முடியும் - காதல்;
காதலில் ஆரம்பித்து கல்யாணத்தில்
                    முடியும் - உறவு;
என் காதலோ கல்லூரியில் ஆரம்பித்து
            அங்கேயே முடிந்துவிட்டது;
எனக்கென்று இருந்த உறவே எதிரியாய்
           மாறி என்னையே கொள்கிறது!

Tuesday, May 3, 2011

அறிமுகம்

எழுதுவதற்கும் சொல்வதற்கும் ஒன்றுமே இல்லை...